கரூர் அருகே மதுபான கடையை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு.

கரூர் அருகே மதுபான கடையை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு.
கரூர் அருகே மதுபான கடையை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருபவர் பிரபு. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கரூர் மாவட்டம் கரூர் - திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை பகுதியில் இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மது அருந்திவிட்டு உடனடியாக இருசக்கர மோட்டார் வாகனத்தை வாகன ஓட்டிகள் ஓட்டி செல்லும்போது அடிக்கடி கரூர்-திண்டுக்கல் சாலையில் விபத்துக்கள் நடைபெறுவதால் உயிரிழப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் மது பிரியர்களால் சமூக சீர்கேடுகளும் குற்ற செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
Next Story