கிருஷ்ணராயபுரம்- வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டிற்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் பயணம்.

கிருஷ்ணராயபுரம்- வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டிற்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் பயணம்.
கிருஷ்ணராயபுரம்- வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டிற்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் பயணம். திமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் மகளிர் மாநாடு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்களில் அலைகடலாய் திரண்டு மாநாட்டில் மகளிர் அணியினர் பங்கேற்று வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் மகளிர் அணியினர் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில பொறியாளர் அணி துணை செயலாளருமான அம்பாள் நந்தகுமார், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், உப்பிடமங்கலம் பேரூராட்சி தலைவர் திவ்யா தங்கராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநாட்டிற்கு செல்லும் மகளிர் அணியினரை வழி அனுப்பி வைத்தனர்.
Next Story