டூவீலர் திருட்டு போலீசார் விசாரணை

X
Komarapalayam King 24x7 |29 Dec 2025 7:14 PM ISTகுமாரபாளையத்தில் டூவீலர் திருடப்பட்டதால் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ், 21. குமாரபாளையம் வட்டமலை தனியார் கல்லூரியில் டிப்ளமா படிப்பு படித்து வருகிறார். இவர் டிச.22 இரவில், வட்டமலை பகுதியில் உள்ள நண்பர் அறையில் தங்கினார். இதனால் நண்பனின் அறை முன்பு தனது டி.வி.எஸ். ரெய்டர் வாகனத்தினை நிறுத்தி விட்டு தூங்கினார். மறுநாள் எழுந்து பார்த்த போது, தனது டூவீலர் காணாமல் போனது அறிந்து அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
