புதிய கடைக்கு வந்த டூவீலர்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

குமாரபாளையத்தில் நேற்று துவங்கப்பட்ட புதிய கடைக்கு வந்த டூவீலர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை நகரின் மையப்பகுதி ஆகும். இங்கிருந்து பவானி செல்லும் வாகனங்கள், குமாரபாளையம் நகரிலிருந்து சேலம் செல்லும் வாகனங்கள், பள்ளிபாளையம், ஈரோடு செல்லும் வாகனங்கள் பிரிந்து செல்லும் இடம் ஆகும். கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நேற்று, வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடை ஒன்று தொடங்கப்பட்டது. எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த இந்த பகுதியில், நேற்று துவங்கப்பட்ட புதிய கடைக்கு, பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். இவர்கள் தங்கள் டூவீலர்களை கடையின் முன்புறம் வரிசையாக நிறுத்தி விட்டு சென்றனர். பேருந்துகள், லாரிகள், உள்ளிட்ட வாகனங்கள் மிக குறுகிய சாலை என்பதால், வழக்கமாக மெதுவாக தான் செல்வார்கள். நேற்று இந்த புதிய கடையின் முன்பு, ஏராளமான டூவீலர்கள் நிறுத்தியதால், பேருந்து, லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏரளமான வாகனங்கள் வரிசையில் நின்றன. நேற்று விடுமுறை நாள் என்பதால், கூட்டம் அதிகம் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த புதிய கடையினர் வசம் சொல்லி, வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தினமும் இது போல் இந்த பகுதியில் கடும் போக்குவ்ப்றது நெரிசல் ஏற்படும் ஏற்ன பொதுநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
Next Story