ராமநாதபுரம் அடிப்படை வசதி வேண்டி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

X
Ramanathapuram King 24x7 |30 Dec 2025 3:00 PM IST23 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை: குண்டும் குழியுமான சாலைகள் மாணவர்கள் முதியவர்கள் அவதி: புதிய சாலை அமைத்து தர கீழ அரும்பூர் கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கீழ அரும்பூர் கிராமத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலை பராமரிக்கப்படாத்தால் குண்டம் குழியுமான சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கீழ அரும்பூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணை அடுத்த அரும்பூர் கிராமத்தில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குளத்தூர் பிரிவு சாலை முதல் கீழ அரும்பூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை உள்ள பகுதிக்கு, சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே குண்டு குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மழை பெய்தால் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பராமரிக்கப்படாத சாலையால் பள்ளிச் செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன், மருத்துவ அவசரத் தேவைகளுக்காக அழைத்தால் ஆட்டோக்கள் கூட வருவதில்லை என கராம பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குளத்தூர் பிரிவு சாலை முதல் கீழ அரும்பூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு வழியாக திருவெற்றியூர் தொண்டி சாலையை இணைக்கும் வரை உள்ள சாலையை புதிய தார்ச்சாலையாக அமைத்துத் தருமாறு கோரிக்கை மனு அளித்தனர். 23 ஆம் ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலையை தற்போது வரை பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் கிராம மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் இதுகுறித்து பல்வேறு முறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புறக்கணிப்பதுடன், தங்களிடம் உள்ள அரசு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
