நாகை ஏடிஎம் மகளிர் கல்லூரியில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாணவர்களின் எதிர்கால தொழில் முன்னேற்றத்திற்கான கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது

X
Nagapattinam King 24x7 |30 Dec 2025 3:45 PM ISTநாகை ஏடிஎம் மகளிர் கல்லூரியில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாணவர்களின் எதிர்கால தொழில் முன்னேற்றத்திற்கான கல்வி கருத்தரங்கம்
நாகப்பட்டினம் ஏடிஎம் மகளிர் கல்லூரி தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு சங்கம் சார்பில் எதிர்கால தொழில் முன்னேற்றத்திற்கான கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ஷோபியா பொன் செல்வி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் செல்போன் பயன்பாட்டை குறைத்து புத்தக வாசிப்பில் மாணவிகள் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும் , போட்டி தேர்வில் பங்கேற்க நூலகத்தில் உள்ள வழிக்காட்டி புத்தகங்களை வாசிக்க வேண்டும் , எதிர்கால வெற்றிகரமாக தொழில் தொடங்குவதற்கான கல்வி மற்றும் ஆலோசனை வழங்க கூடிய புத்தகங்களை தேடி வாசிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து புத்தக வாசிப்பு உறுதிமொழியை மாணவிகள் எடுத்துக் கொண்டனர். இதில் கல்லூரியில் நூலக ஆலோசக குழு அமைக்கப்பெற்று புத்தக வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக நூலக தன்னார்வலர்களுக்கு புத்தகம், மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட SRM - TRP பொறியியல் கல்லூரி நூலகர் ஜாஸ்மின், கல்லூரி நூலகர் விஜயலெட்சுமி மற்றும் கல்லூரி முதுநிலை மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story
