சத்தியமங்கலம் விஏஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து ஆர்பாட்டம்
Kulithalai King 24x7 |30 Dec 2025 4:21 PM ISTஇலவச வீட்டு மனை வழங்க சிபிஐஎம் பொதுமக்களுடன் போராட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சியில் சொந்த வீட்டு மனை இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க கோரி கடந்த இரண்டு மாதங்கள் முன்பு கோரிக்கை மனு வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை எடுத்து இன்று சிபிஐஎம் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் தலைமையில் 2 ஊராட்சிகளை சேர்ந்த வீடு இல்லாத பொதுமக்கள் ஒன்று திரண்டு அய்யர்மலை கடைவீதியில் இருந்து ஊர்வலமாக கண்டன கோஷங்களை எழுப்பிக் கொண்டு அய்யர்மலை கிராம நிர்வாக அலுவலகம் வரை சென்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் விரைந்து வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனால் அய்யர்மலை பகுதியில் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
Next Story




