பி.அக்ரஹாரத்தில் முனியப்பன் கோயில் திருவிழா

X
Dharampuri King 24x7 |30 Dec 2025 6:36 PM ISTஆடுகள் கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள் கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். இந்த திருவிழாவையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விழா குழு சார்பில் ஆடுகள் கோழி பலியிட்டு முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முனியப்பனுக்கு மார்கழி மாதம் 1ம் தேதியிலிருந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று இருமுடி கட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் அழகு குத்திக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை ஒட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முனியப்பன் கோவில் திருவிழாவிற்கு பென்னாகரம், தர்மபுரி, பாலக்கோடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பி.அக்ராகரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவுக்கு இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் கிருஷ்ணன் உதவி ஆணையர் மகாவிஷ்ணு , செயல் அலுவலர் கீதாஞ்சலி மற்றும் விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
