பரமத்தி வேலூரில் பகவதி அம்மன் தேர் திருவிழா .

பரமத்தி வேலூர் பகவதி அம்மன் கோயில் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Lபரமத்தி வேலூர், டிச.30:  பரமத்தி வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் தேர் திருவிழா கடந்த 26ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. விழாவில் தினமும் மாலை சப்பாரம் வாகனம்,சிம்ம வாகனம், பூந்தேர் வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், திங்கட்கிழமை பூச்சிரித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழாவில் பகவதி அம்மன் தூக்குத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார், அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தனர் பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் தூக்கு தேரை சுற்றுவட்டார பகுதி சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டுக் கொண்டு தூக்குத் தேரை தூக்கிக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தது. திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவின் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஊர்காரியக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story