பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூம் மீட்டிங்கை மாலையில் நடத்துவதை தவிர்த்து பகல் பொழுதில் நடத்த வேண்டும்-கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுசெயலாளர் பிரகலதா பேட்டி.
Karur King 24x7 |30 Dec 2025 7:42 PM ISTபாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூம் மீட்டிங்கை மாலையில் நடத்துவதை தவிர்த்து பகல் பொழுதில் நடத்த வேண்டும்-கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுசெயலாளர் பிரகலதா கரூரில் பேட்டி.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஜூம் மீட்டிங்கை மாலையில் நடத்துவதை தவிர்த்து பகல் பொழுதில் நடத்த வேண்டும்-தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பிரகலாதா கரூரில் பேட்டி. தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க ஆலோசனைக் கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பேபி மாவட்ட பொருளாளர் விஜி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொது செயலாளர் பிரகலதா கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு கிடைக்க வேண்டிய வாட்டர் சானிடேஷன், யுனைடெட் ஃபண்ட், டேட்டா கார்டு போன்ற பண பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரியான முறையில் தர வேண்டும் எனவும், கிராம சுகாதார செவிலியர் தாய் சேய் நலப்பணியுடன் கூடுதலாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாலை 6:00 மணிக்கு வரவழைத்து ஜூம் மீட்டிங் நடத்துவதும், அதன் பிறகு காலதாமதமாக வீட்டிற்கு செல்லும்போது இரவாகி விடுவதால் கிராமப் பகுதியில் இருந்து வீடுகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமமும் பாதுகாப்பு இன்மையும் ஏற்படுவதால், ஏற்கனவே மேற்கொண்டு வரும் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் ஜூம் மீட்டிங் மதியம் ஒரு மணிக்கு துவக்கி விரைவாக முடித்து செவிலியர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், கிராம சுகாதார செவிலியர்கள் இரவு பகல் பாராமல் பணி செய்து வரும் வேளையில், அவர்களை இரவு நேரத்தில் ஓபி டூட்டி பார்க்க சொல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இரவும் தெரிவித்தார். .
Next Story





