ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள் பாலித்தார்...

X
Rasipuram King 24x7 |30 Dec 2025 7:54 PM ISTராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள் பாலித்தார்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பெருமாள் கோவில்கள் மட்டுமல்லாமல் பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
