ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வீணாகும் தண்ணீர்..,

ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வீணாகும் தண்ணீர்..,
X
ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வீணாகும் தண்ணீர்..,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக கீழ்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பயன்பாட்டிற்காக மின் மோட்டார் மூலம் ஆழ்துளை கிணறில் இருந்து கீழ் நிலை நீர் தேக்கத்தொட்டிற்ருக்கு தண்ணீர் நிரப்பி கொண்டிருந்தனர். பின்னர் மின் மோட்டார் சுவிட்ஸ் அனைத்து வைக்காமல் மறந்து விட்டதால், கீழ்நிலை நீர்த்தக்க தொட்டி நிரம்பி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை தண்ணீர் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது ஒரு சில கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் நகரில் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்களின் அலட்சியத்தால் தொடர்ந்து, இதுபோன்ற தண்ணீர் வீணாக சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் சிக்கனம் மற்றும் தண்ணீரின் தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம், குடிநீர் வீணாகி வெளியேறும் நேரத்தில் பொது குழாய்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தால் வரவேற்கத் தக்கது என்றார். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story