டூவீலரில் சென்ற இருவர் கீழே விழுந்ததில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

டூவீலரில் சென்ற இருவர்  கீழே விழுந்ததில்  ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
X
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்ற இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் அருண், 29, கட்டிட கூலி. இவரும், இவரது நண்பர் கட்டிட கூலி, கவின்குமார், 24, என்பவரும், அருணுக்கு சொந்தமான ஹீரோ ஹோண்டா ஸ்பெலன்டர் வாகனத்தில், அருண் ஓட்ட, கவின்குமார் பின்னால் உட்கார்ந்தவாறு, டிச. 23, நள்ளிரவு 12:30 மணியளவில், குமாரபாளையம் அருகே, காவிரி புதிய பாலம் அருகே உள்ள எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த திட்டின் மீது மோதி,. நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 06:00 மணியளவில் அருண் இறந்தார். கவின்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது குமாரபாளையம் போலீசார் வழக்குப்பபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story