திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் சாதனை!

திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் சாதனை!
X
"ஸ்மார்ட் பிளைண்ட் ஸ்டிக்" பார்வை குறைப்பாடு சார்ந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்து அதற்கான சிறந்த தீர்வுகளை சமர்ப்பித்து ரூபாய் 75,000/- முதல் பரிசை வென்றனர்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அகில இந்திய அளவில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி போட்டி 2025 (டிசம்பர் 8 முதல் 12, 2025) நொய்டாவில், டெல்லியில் உள்ள ஜி.எல்., பஜாஜ் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவன கல்லூரியில் நடைபெற்றது.இதில் மாணவ மாணவிகளின் ஆராய்ச்சி அறிவை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதிலும் தலைசிறந்த கல்லூரிகளில் இருந்து சுமார் 3,34,456 மாணவ மாணவியர் போட்டியில் கலந்து கொண்டனர்.இதில் ரோபோடிக்ஸ் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (ஏஐ) கணினிப் பயன்பாட்டியல், வன்பொருள், ஹெல்த்கேர் சிஸ்டம், போன்ற பல்வேறு துறைகளில் 237 வகையான பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காக இப்போட்டி நடைபெற்றது. இதில்
பார்வை குறைபாடு பிரச்சினையை தீர்க்க "ஸ்மார்ட் பிளைண்ட் ஸ்டிக் " என்ற தலைப்பில் 344 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன, இதிலிருந்து ஆறு சிறந்த ஆராய்ச்சி படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டி நடைபெற்றது.ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக மாணவ, மாணவியர்கள் ஜி.எல். பஜாஜ் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவன கல்லூரியில் நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டுதலுடன் தங்கள் படைப்புகளை உருவாக்கி சமர்ப்பித்தனர்.இதில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 'டீம் பிளைண்ட் ஸ்பாட்' கணினி அறிவியல் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிகள் குகனா ஸ்ரீ ,தேவிகா கீர்த்தனா, திவ்யா, எப்சிபா, கனிமொழி மற்றும் பேராசிரியர்கள் மணிகண்டன், கோ. ராஜேஸ்வரி குழுவினர் "ஸ்மார்ட் பிளைண்ட் ஸ்டிக்" பார்வை குறைப்பாடு  சார்ந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்து அதற்கான சிறந்த தீர்வுகளை சமர்ப்பித்து ரூபாய் 75,000/- முதல் பரிசை வென்றனர்.
'டீம் பிளைண்ட் ஸ்பாட்' உருவாக்கிய வெற்றிகரமான தீர்வு, பார்வை குறைபாடுடைய பயனர்களின் பாதுகாப்பான நகர்வு, சுற்றுப்புற விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட் பிளைண்ட் ஸ்டிக் ஆகும். பல்வேறு சென்சார்கள் மூலம் தடைகளை கண்டறியும் தொழில்நுட்பம், அறிவார்ந்த பின்னூட்ட முறைகள் மற்றும் மனித உடலமைப்பிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஹார்ட்வேர் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த அமைப்பு பல்வேறு சூழல்களில் உடனடி நேரடி எச்சரிக்கைகளை வழங்குகிறது. “ஸ்மார்ட் பிளைண்ட் ஸ்டிக்” பயன்பாட்டின் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது உலகளாவிய அளவில் பார்வை குறைபாடுடைய நபர்கள் பயன் பெறலாம். இது அவர்களின் தினசரி வாழ்க்கையில் பாதுகாப்பு, சுயநிலை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். விவேகானந்தா கல்லூரியில் உள்ள பொறியியல் இன்னோவேஷன் இன்ஸ்டியூட் கவுன்சில் (IIC) மற்றும் AICTE ஐடியா ஆய்வகம்  (AICTE IDEA Lab) மூலமாக மாணவிகளின் ஆராய்ச்சி அறிவை வளர்க்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வெற்றிபெற்ற மாணவிகள் ஆகியோரை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி, விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் குப்புசாமி, ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் பாலகுருநாதன், முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம் மற்றும் முதல்வர் டாக்டர் கே.சி.கே. விஜயகுமார் ஆகியோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
Next Story