வழக்கில் பிடித்த வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ள போலீசார் அழைப்பு
Komarapalayam King 24x7 |30 Dec 2025 8:49 PM ISTகுமாரபாளையம் வழக்கில் பிடித்த வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ள போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு விபத்து வழக்கு சம்பந்தமாக ஏராளமான டூவீலர்கள் பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர்கள், போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால், போக்குவரத்து இடையூறு மற்றும், போலீஸ் ஸ்டேஷன் பணிகளுக்காக வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல், எதிர் திசையில் உள்ள வணிக நிறுவனங்கள் முன்பு நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் வணிக நிருவனத்தாருக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் வழக்கு சம்பந்தமாக வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்தால், அதனை உரிய ஆவணங்கள் கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ள சொல்லி இன்ஸ்பெக்டர் தவமணி கூறியுள்ளார்.
Next Story


