சொர்க்க வாசல் திறப்பு விழா ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
NAMAKKAL KING 24X7 B |30 Dec 2025 8:51 PM ISTநாமக்கல்லில் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் அதிகாலை 4.30 மணிக்கு திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்திய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாகக் கூடையில் ஜடாரியை வைத்து கொண்டுவந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு நாமக்கல்லை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு நாமக்கல் கடைவீதி சாலை மற்றும் பழைய பேருந்து நிலைய சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு அவ்வழியாக வரும் வாகனங்கள் கோட்டை சாலை, பூங்கா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. பாதுக்காப்பிற்க்காக சுமார் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்
Next Story




