புத்தாண்டு கேக் திருவிழா

புத்தாண்டு 2026-ஐ வரவேற்கும் விதமாக, பெரம்பலூரில் அஸ்வின்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெறும் 13-ம் ஆண்டு புத்தாண்டு கேக் திருவிழா இன்று (30) மாலை கோலாகலமாக தொடங்கியது.
புத்தாண்டு 2026-ஐ வரவேற்கும் விதமாக, பெரம்பலூரில் அஸ்வின்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெறும் 13-ம் ஆண்டு புத்தாண்டு கேக் திருவிழா இன்று (30) மாலை கோலாகலமாக தொடங்கியது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிர்புறம் அமைந்துள்ள அஸ்வின்ஸ் பார்ட்டி ஹால்-ல் நடைபெறும் இந்த கேக் திருவிழா அரங்கத்தை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் வேந்தர் சீனிவாசன், ரோவர் கல்வி நிறுவனங்கள் மேலாண்மை தலைவர் வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சி, அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் டாக்டர் கே.ஆர்.வி. கணேசன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் ரெங்கராஜ், செல்வக்குமாரி கணேசன், தலைமை நிர்வாக அலுவலர் அஸ்வின், டாக்டர் ஹம்ருத்தா அஸ்வின்ஸ், நிஷா, சிபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ராஜாராம், சாதிக் ரியல் எஸ்டேட் சுப்டு, பாரத் குழுமம் கார்த்திக், வள்ளலார் குழுமம் அரவிந்தன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த 13-ம் ஆண்டு புத்தாண்டு கேக் திருவிழாவில், புதிய ட்ரெண்ட் கேக் வகைகள், லைவ் கேக் தயாரிப்பு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் அட்வான்ஸ் மாடல் கேக்குகள், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உடனுக்குடன் தயாரிக்கப்படும் கஸ்டமைஸ் கேக்குகள் ஆகியவை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான பல்வேறு ருசி மற்றும் வடிவங்களில் கேக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேக் திருவிழாவை பார்வையிட்டு வருகின்றனர். இந்த கேக் திருவிழா இன்று மற்றும் நாளை (30, 31) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
Next Story