குளித்தலையில் நீர்வளத்துறை அலுவலகத்தில் பாசன ஆய்வாளரை தாக்கிய சம்பவம்

X
Kulithalai King 24x7 |30 Dec 2025 10:00 PM ISTஇரண்டு பேரை கைது செய்த குளித்தலை போலீசார்
கரூர் மாவட்டம் குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் பாசன ஆய்வாளராக கணேஷ் என்பவர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 11 மணியளவில் அலுவலக வளாகத்தில் கொடிக்கம்பம் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது காரில் வந்த மூன்று நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து நீ என்ன அரசு அதிகாரியா என கேட்டு சரமாரியாக கையால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களின் உறவுக்காரர்கள் சிலர் வந்த உடன் மீண்டும் 5 நபர்கள் தாக்கியுள்ளனர். அப்போது அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் விலக்கிவிட்டு முதலுதவி அளித்துள்ளனர். பிறகு குளித்தலை காவல் நிலையத்திற்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கணேஷ் புகார் மனு அளித்துள்ளார். விசாரணையில் தண்ணீர் பள்ளியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயன்ற போது நேற்று பாசன ஆய்வாளர் கணேஷ் தடுத்து நிறுத்தி இங்கு கட்டக்கூடாது என தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணி ஆய்வாளர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. இதனை அடுத்து சிசிடிவி ஆதாரங்களை வைத்து தண்ணீர்பள்ளியைச் சேர்ந்த நாகராஜ், ரவிச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளித்தலையில் பணியில் இருக்கும் அரசு ஊழியரை அலுவலக வளாகத்தில் நுழைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
