கிருஷ்ணராயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் விபத்து சிக்னல் ஒயர்கள்

சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூர் வழியாக கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கருப்பத்தூர் ஐயப்பன் மற்றும் சிவன் கோவில் அருகே கனரக வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி அருகில் உள்ள வாய்க்காலில் குளித்து இழைப்பாறுவதற்காக வாகனங்களை சாலையின் இரு புறமும் ஓரமாக நிறுத்தி வருவது வழக்கம். மேலும் கருப்பத்தூர் ஐயப்பன் மற்றும் சிவன் கோவில் அருகே அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் காயம் அடைந்தும், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்ததால் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் சோலார் விபத்து போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிக்னல்களை இணைக்கும் உயிரானது மிகவும் தாழ்வாகவும், சாலையில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் செல்ல முடியாதவாறு இடையூறாகவும் உள்ளது. எனவே அதனை சரி செய்து தாழ்வாக உள்ள சிக்னல் கம்பி ஒயர்களை பொதுமக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு இடையூறாக இல்லாதவாறு மேல் நோக்கி அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story