சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போஸ்டரால் பரபரப்பு

X
Tenkasi King 24x7 |31 Dec 2025 7:06 PM ISTசிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போஸ்டரால் பரபரப்பு
உள்ளாட்சித் துறையே ! மாவட்ட நிர்வாகமே! நகர்புறவளர்ச்சி துறை அதிகாரிகளே! சிவகிரி பேரூராட்சி நிர்வாகமே!! சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி இல்லாத பகுதி என்று கூறி கடந்த பல ஆண்டுகளாக குடியிருக்கும் அப்பகுதி மக்களுக்கு வாறுகால், ரோடு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் தற்போது பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கிறது. சிவகிரி பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும். நகர்புற வளர்ச்சிதுறை அதிகாரிகளையும் சிவகிரி பேரூராட்சி நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக, மேல்படி குடியிருப்பு பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடைபெறும். என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சிவகிரி நகர குழு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story
