மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர்.சந்திரகலா அறிவுறுத்தல்.

Ranipet King 24x7 |31 Dec 2025 7:34 PM ISTபட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யும் பெயர் சேர்க்க படிவம் - 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் -7, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8 பணியும் நடைபெறவுள்ளதால் முகாமில் கலந்துகொள்ளும்
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர்.சந்திரகலா அறிவுறுத்தல். ராணிப்பேட்டை மாவட்டம் ஜன. 01 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமானது ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் வெள்ளிகிழமைதோறும் அரக்கோணம் டவுன் ஹால் கிளப் புதிய கட்டிடம் மற்றும் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமைதோறும் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையிலும் டிசம்பர்-2025 முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்திற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமானது 02.01.2026 அன்று அரக்கோணம் டவுன் ஹால் கிளப் புதிய கட்டிடம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யும் பெயர் சேர்க்க படிவம் - 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் -7, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8 பணியும் நடைபெறவுள்ளதால் முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார்கள்
Next Story
