ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ் தலைமையில் பொதுமக்களோடு இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்

X
Ramanathapuram King 24x7 |1 Jan 2026 11:58 AM ISTபுதிய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட எஸ்பி சந்தீஷ் தலைமையில் பொதுமக்களோடு இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் போலீசார் பொதுமக்களோடு இணைந்து 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பகுதியில் வணிகம் செய்ய வந்த பொதுமக்களோடு இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர் இது பற்றி ராமநாதபுரம் எஸ்பி சன்டிஸ் கூறுகையில் ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் சுமார் 52 காவல் நிலையங்களில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து புத்தாண்டு விழா மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டுள்ளது 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சுமார் 37 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் பொதுமக்கள் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்க வேண்டும் மது போதையில் வாகனம் ஓட்டுதல் வாகனத்தை ரேசிங் செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது அருவா வைத்து கேக்கு கொண்டாடினால் ஆயுதச் சட்டம் பாயும் ஆகவே அமைதியான முறையில் புத்தாண்டை மகிழ்ச்சியோடும் இனிப்போடும் கொண்டாடி மகிழ வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
Next Story
