ஆலங்குளம் அருகே கட்டுமான தொழிலாளர் சங்க‌ கூட்டம்

ஏஐசிசிடியூ கட்டுமான தொழிலாளர்‌ சங்க கூட்டம் நடந்தது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா ஐந்தாம்கட்டளை AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் புத்தாண்டு அன்று சங்கத்தின் கிளை தலைவரும் AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் வில்சன் தலைமையில் நடைபெற்றது AICCTU தென்காசி மாவட்ட பொது செயலாளர் தோழர் M வேல்முருகன் AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் தோழர் D பொன் செல்வன் பங்கேற்று வருகின்ற ஜனவரி 6 ல் தென்காசி தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு நடைபெறும் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் போனஸ் மற்றும் நலவாரிய பிரச்சினைகள் கண்டன போராட்டம் சம்பந்தமாக பேசினார்கள் கூட்டத்தில் சங்கத்தின் கிளைச் செயலாளர் மாடசாமி பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் கட்டுமான சங்க கிளை தோழர்கள் பங்கேற்றனர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருகின்ற ஜனவரி 6 ல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தென்காசி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் பொங்கல் போனஸ் ரூபாய் 15,000 வழங்கிடவும் குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கிடவும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அனைத்து நலவாரிய பணப் பலன்களும் இரட்டிப்பாக வழங்கிடவும் தேவையில்லாமல் கட்டுமான தொழிலாளர்களை அலைக்கழிப்பதை நிறுத்திடவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநில தழுவிய கண்டன போராட்டத்தில் ஐந்தாம்கட்டளை கட்டுமான தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது எனவும் அதற்கான போராட்ட நிதி ரூபாய் 500 உடனடியாக கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது
Next Story