தளவாய்பாளையம் காலனி பூங்கா அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

தளவாய்பாளையம் காலனி பூங்கா அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
தளவாய்பாளையம் காலனி பூங்கா அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா புஞ்சை கடம்பன்குறிச்சி அருகே உள்ள பெரிய வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துவீரன் வயது 22. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு மகன் ஹரிகரன் வயது 32. கடந்த டிசம்பர் 27ம் தேதி இரவு 7.20- மணியளவில் இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் வாங்கல் - தரவாபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தளவாபாளையம் காலனி பூங்கா அருகே வந்த போது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சாலைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணிய மகன் ராஜவேலு வயது 39 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் முத்துவீரன் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முத்துவீரன் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ஹரிஹரனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துவீரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜவேலு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story