மணப்பாறை அருகே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புனித நீர் தெளிப்பு.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புனித நீர் தெளிப்பு.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புனித நீர் தெளிப்பு.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புனித நீர் தெளிப்பு.
Tiruchirappalli (East) King 24x7 |1 Jan 2026 10:24 PM ISTமணப்பாறை அருகே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புனித நீர் தெளிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் உள்ள புனித இன்ஞாசியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கருங்குளம் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் குளிப்பாட்டி அழகுபடுத்தி ஆலயத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டதும் காளைகளுக்கான சிறப்பு வழிபாடு நடத்தி மந்திரித்து புனித நீர் காளைகளின் மீது தெளிக்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு காளைகள் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்து ஓட்டம் பிடித்தது. காளையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பலரையும் கயிற்றை விட்டனர். இதனால் காளைகள் அங்கிருந்து துள்ளி குதித்து ஓடியது. பின்னர் காலையின் உரிமையாளர்கள் காளைகளைப் பிடித்து சென்றனர். காளைகள் துள்ளி குதித்து ஓடும்போது அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்ததால் அந்த பகுதியே அப்பொழுது ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் கயிறை அவுத்து விடுவதால் அங்கிருந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளையை அடக்கினார் அப்பொழுது தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார் காளைகள் அவிழ்த்து விடப்படுவதை தடுத்து நிறுத்தி மீண்டும் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடக்கூடாது அசம்பாவிதம் ஏறாபட்டால் காளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
Next Story



