கோயில்களில் பிரதோஷ வழிபாடு

புத்தாண்டு சிறப்பு வழிபாடு மற்றும் மார்கழி மாத பிரதோஷ விழா நடைபெற்றதில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.
ஆரணி, பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு மற்றும் மார்கழி மாத பிரதோஷ விழா நடைபெற்றதில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, மாலை நடைபெற்ற பிரதோஷ விழாவின்போது கொடிமரத்திற்கு அருகே உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் சிறப்பு தீபாராராதனை நடந்தது. பின்னர், கோயில் உட்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமர்த்தி உலா நடைபெற்றது. இதில் சேத்துப்பட்டு, பெரணமல்லூர், வந்தவாசி, செய்யார், ஆரணி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரிய மலை சிவன் கோயில் நிர்வாகி ஐ.ஆர்.பெருமாள் சுவாமிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர். இதேபோல் ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம், ஆரணி கைலாயநாதர் கோயில் மற்றும் ஆரணி அடுத்த மெய்யூர் மெய்கண்டீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.கோயில்களில் நடந்த பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.
Next Story