ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

X
Pudukkottai King 24x7 |2 Jan 2026 8:23 AM ISTகந்தர்வக் கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை.
கந்தர்வக் கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ரகமதுல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து குழந்தைகளிடம் பேசும் பொழுது 2025 முடிந்து 26 ஆம் ஆண்டு தொடங்குகிறது அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், மூடநம்பிக்கை ஒழிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கான அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தக்கூடிய வகையில் தமிழில் துளிர் மாத இதழும் ஆங்கிலத்தில் இரு மாத இதழ் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இதழ்கள் வெளிவருகிறது மாணவச் செல்வங்கள் தங்களுடைய படைப்புகளை அனுப்பலாம் தொடர்ந்து துளிர் இதழை வாசிக்க வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிதல் தேர்வு எதிர்காலத்தில் அரசு ஊழியர் அதிகாரியாக வரக்கூடிய வாய்ப்பினை வழங்குகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தக்கூடிய புத்தகத் திருவிழா அனைவரையும் வாசிக்கக்கூடிய பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. மாணவச் செல்வங்கள் ஆகிய அனைவரும் இந்த ஆண்டு முதல் தினந்தோறும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் அவ்வாறு புத்தகங்கள் வாசிப்பதனால் அறிவாற்றல் மேம்படுவதோடு தன்னம்பிக்கை எதிலும் வெற்றி பெறக்கூடிய ஆற்றலும் துணிவும் வாசிப்பு பழக்கத்தினால் உருவாகும். அனைவரும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தாண்டு புதிய உற்சாகம் பிறக்கும் ஆண்டாக அனைவருக்கும் அமையட்டும். இந்த ஆண்டில் அனைவரும் வாசிப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை நிர்வாகிகள் நந்தினி, ரேவதி, பிரேமா, நிந்தியா உள்ளிட்டோரும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
