பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்க அறிவுறுத்தல்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்க அறிவுறுத்தல்.
X
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு, வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன்களை விநியோகிக்க வேண்டும் என, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து பேசியதாவது தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விநியோகம் செய்ய வேண்டும்.தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.ரேஷன் கார்டுதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விநியோகம் செய்ய வேண்டும். இதற்காக ரேஷன் கார்டுகள் தெருவாரியாக பிரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு, டோக்கன்களை ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு விற்பனையாளர்கள் நேரில் சென்று வழங்க வேண்டும். முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை ஜன. 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 100 சதவீதம் அனைத்து பயனாளிகளுக்கும் வீடுகளுக்கு சென்று பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்." என்றார்.நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் அறிவழகன், பொதுவிநியோகத் திட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள் சிவக்குமார், நிர்மலா, தியாகராஜன் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story