இராஜேந்திரம் ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் கோவிலில் பிச்சாடனார் உற்சவம்

தாருகாவன முனிவர்களின் கர்வம் அளித்தல் மகிழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தேவநாயகி உடனுறை ஸ்ரீ மத்யார்ஜீனேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் பிச்சாடனார் உற்சவம் எனும் தாருகாவன முனிவர்களின் கர்வம் அழித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மான், பூதம், சூலாயுதம் உருவத்துடன் பிச்சாடனார் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் பச்சரிசி, வெல்லம் மற்றும் நாணயங்கள் சுவாமிக்கு அளித்து பூஜை செய்து வழிபட்டனர். தேரோடும் வீதியில் உற்சவர் உக்கரத்துடன் வருவது போல் ஆடியவாறு வீதி உலா வந்து தயார் நிலையில் அமைக்கப்பட்ட தர்காவனம் முன்பு பூஜை செய்து பிச்சாடனார் பெருமான் தர்காவனத்தை அழித்து முனிவர்கள், முனி தேவியர்களின் கர்வத்தையும் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக உற்சவர் மத்யார்ஜீனேஸ்வரர் திருக்கோவிலுக்குள் கொண்டு சென்று வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story