வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் கும்மியடித்து நடனமாடிய கரூர் எம்பி ஜோதிமணி.

வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் கும்மியடித்து நடனமாடிய கரூர் எம்பி ஜோதிமணி.
வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் கும்மியடித்து நடனமாடிய கரூர் எம்பி ஜோதிமணி. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவருமான வீரபாண்டிய கட்டபொம்மன் 267 வது பிறந்தநாள் தமிழகம் எங்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமுதாய அமைப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூரை அடுத்த தோரணாக்கல் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்த கரூர் எம்பி ஜோதிமணி பின்னர் அந்த சமுதாய மக்கள் முளைப்பாரியை வைத்து வட்டமிட்டு கும்மி அடித்து கொண்டாடியதை பார்த்த கரூர் எம்பி ஜோதிமணி அவர்களுடன் இணைந்து கும்மி அடித்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இது அந்த சமுதாயத்தினரிடையே எழுச்சியை ஏற்படுத்தியது.
Next Story