கடையநல்லூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு

கடையநல்லூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு
X
கடையநல்லூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு
கடையநல்லூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று நடந்தது விழாவிற்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் தலைமை வகித்து துவக்கி வைத்தார் நகராட்சி ஆணையாளர் லட்சுமி மேலாளர் பேச்சிகுமார் சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் சுகாதார ஆய்வாளர் மாதவன்ராஜ் மற்றும் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர் அதனைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி துவக்கி வைத்தார் இன்று முதல் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் வகையில்இத் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது காலை சாம்பார் , பொங்கல் சாம்பார் , கிச்சடி சாம்பார் என நகராட்சிகளில் பணியாற்றும் 65 தூய்மைப்பணியாளர்களுக்கு சத்தான காலை உணவு திட்டம் தொடங்கி தூய்மை பணியாளர்களுடன் நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் இருவரும் சேர்ந்து உணவு அருந்தினார்கள் . நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் யாசர் கான், மாலதி, தனலட்சுமி ,மாரியம்மாள், நிலோபர் அப்பாஸ் ,மீராள்ஹைதர்அலி, முருகன், சந்திரா அம்மையப்பன் மற்றும் நியமன நகர மன்ற உறுப்பினர் முகம்மது மசூதுமற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமார்,மதன் மற்றும் முருகானந்தம், ஹக்கீம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story