தென்காசி மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

X
Tenkasi King 24x7 |3 Jan 2026 6:02 PM ISTமாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1.கிராம ஊராட்சிகளில் 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திற்கு மாறாக கிராம ஊராட்சி தலைவரை நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து கிராம ஊராட்சி செயலாளரை கிராம ஊராட்சி நிர்வாக அலுவலராக நியமிக்க வேண்டும். 2.தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 3.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலாளருக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கிடவும். அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து உரிமைகளையும் வழங்கிட வேண்டும். 4.அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். 5.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் அனைத்து கணினி உதவியாளர்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, முறையான வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். 6.MGNREGA சட்டத்தின்படி வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் வட்டார திட்ட அலுவலர் என்கிற தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும் மேலும் MGNREGA திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் பணி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 7.பணி மேற்பார்வையாளர் நிலையில் இருந்து உதவி பொறியாளர் பதவி உயர்வு 2021-2022 முதல் இன்றைய தேதி வரை வழங்கப்படவில்லை. பொறியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வுக்காக இளநிலை பொறியாளர் பதவி உயர்வினை ஏற்க மறுத்த நிலையில், அவர்களுக்கு நான்கு ஆண்டுகளாக உதவி பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆகையால் பொறியியல் பட்டம் முடித்து இளநிலை பொறியாளர் பதவி உயர்வு ஏற்க மறுத்த பணி மேற்பார்வையாளர்களுக்கு சிறப்பு நேர்வாக கருதி உதவி பொறியாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 8.தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின் " எனும் பொதுமக்களின் பல்துறை சார்ந்த கோரிக்கைகளை பெரும் முகாமானது 2025 ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. ஊரக பகுதிகளில் நடைபெறும் இம்முகாம்களை ஊரக வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்து வருகின்றது. அதற்காக பந்தல் அமைத்தல், உணவு வழங்குதல் நிகழ்விற்கான மண்டபங்கள் ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்து வருகிறார்கள். கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ள நிலையில் இச்செலவினங்களை மேற்கொள்வதில் பெரும் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு அனுமதித்துள்ள ரூபாய் 30 ஆயிரம் நிதி போதுமானதாக இல்லை. எனவே "உங்களுடன் ஸ்டாலின் " திட்டம் முகாம் நடத்திட ஒன்றியத்திற்கு ரூபாய் 1.50 இலட்சம் வீதம் தாமதம் இன்றி கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிட வேண்டும். 9.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மக்கள் நலத்திட்டங்களை இரவு பகலாக செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வது முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும். மேலும் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே ஊழியர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டு குறிப்பானைகளுக்கும் இறுதியானை பிறப்பித்திட வேண்டும். 10.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக சிறப்பாக செயல்படுத்தி வரும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களுக்கு மாத இறுதி வேலை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்ட வருவது பொருத்தமற்றதாகும். மாத இறுதி நாட்களில் ஊதியம் வழங்குதல், பணிவு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குதல், பணிவு ஓய்வு ஆணை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் உள்ளதால் மாத இறுதி நாட்களில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அலுவலர்களுக்கு ஆய்வுகள் மற்றும் ஆய்வு கூட்டம் நடத்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டும். 11.அரசாணை எண் 81 மனிதவள மேலாண்மை துறை நாள் 4.8.2018 அரசு கடிதம் மனித வள மேலாண்மை துறை என் 66/N/2024 நாள் 23/7/2024 மற்றும் ஊரக வளர்ச்சி கூடுதல் தலைமைச் செயலாளர். 84/ACS/RD(&)PR 2025 26/3/2025 ஆகியவைகளின் மூலம் தொடர் உத்தரவுகளும், அறிவுரைகளும் வழங்கிய பின்பும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட அலுவலர்களின் மீது பிறப்பிக்கப்பட்ட 17A&17B குற்ற குறிப்பாணைகள் காரணமாக பதவி உயர்வுகள் மற்றும் பணி ஓய்வு பெற முடியாமல் பல மாவட்டங்களில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அரசு ஆணையில் வழங்கப்பட்ட கால அளவுகள் கடந்தும் நிலுவையில் உள்ள அனைத்து குற்ற குறிப்பாணைகளையும் கைவிடப்பட்டதாக கருதி ரத்து செய்திட வேண்டும். 12.கிராம ஊராட்சி பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நிமித்தமாக கடந்து செல்லும் போது அவர்களின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளித்திட ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 13.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணி புரியும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஒரே அலுவலகத்தில் ஊதியம் வழங்கிடவும். வாழ்க்கைக்கு தேவையான போதுமான கூடுதல் ஊதியம் வழங்கிடவும் இவர்கள் பணி நிலையினை சீரமைத்து மேம்படுத்திடவும் வேண்டும் 14.தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ள மாவட்டங்களுக்கு வேறு சில துறைகளில் உள்ளது போல் பணியிடங்கள் வழங்க வேண்டும். 15.மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கும்/ மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும். 16.சமூக தணிக்கை பட்டியலில் ஏற்பட்டுள்ள இழப்புத் தொகையினை கிராம ஊராட்சி செயலரின் ஊதியத்திலிருந்து செலுத்த பல மாவட்டங்களில் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள் இந்நடவடிக்கையினை கைவிட வேண்டும். 17.தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கிராம ஊராட்சிகளை மறு வரையறை செய்து, புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கிடவும். மேலும் 25 கிராம ஊராட்சிகளுக்கு மேல் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களை மறு வரையறை செய்து புதிய ஊராட்சி ஒன்றியங்களையும் உருவாக்கிட வேண்டும். 18.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அமைச்சு பணியில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள அனைத்து பணியிடங்களையும் துறையின் சிறப்பு செயல்பாடுகள், பண்புகள் மற்றும் சமுதாய பங்களிப்பு ஆகியவைகளை கருத்தில் கொண்டு முறையே முதல் நிலை ஊர்நல அலுவலர் மற்றும் இரண்டாம் நிலை ஊர்நல அலுவலர் என பெயர் மாற்றம் செய்து உரிய வித்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். 19.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உதவியாளர் புதவி உயர்வு பெறுவதற்கு பழைய தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய தேர்வு முறையில் தேர்ச்சி பெற வலியுறுத்தாமல் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 20.ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திடவும். அதுவரை ஊராட்சி ஒன்றியங்களில் தனி அலுவலராக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) மற்றும் (ஊராட்சிகள்) ஆகியோரை நியமித்துள்ளதை மாற்றி, மாவட்டத்தில் உள்ள பிற ஊரக வளர்ச்சி உேதவி இயக்குநர் நிலை அலுவலர்களை நியமித்திடவும். கிராம ஊராட்சியின் தனி அலுவலர்களாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை மண்டலம் மாற்றி நியமித்திடவும் வேண்டும். 21.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பணிநிலை, பணி சூழல் மற்றும் செயல் தன்மை ஆகியவைகளை வலுப்படுத்திட ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஊர் நல அலுவலர் பணியிடத்தை இணைத்திடவும். ஒரு தரவு பதிவியலாளர் பணியிடத்தை அனுமதித்திடவும் வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story
