இராணிப்பேட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரெடி ரெய்டு
Ranipet King 24x7 |3 Jan 2026 6:04 PM ISTராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயற் பொறியாளர் அறையில் தங்க நாணயம் உட்பட பரிசு பொருட்கள் பறிமுதல்.
இராணிப்பேட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரெடி ரெய்டு ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயற் பொறியாளர் அறையில் தங்க நாணயம் உட்பட பரிசு பொருட்கள் பறிமுதல். இராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை- பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறை க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP கணேசன் தலைமயில் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலிசார் உடன் வேலூர் ஆய்வு குழுதலைவர் கோட்டிஸ்வரன் குழுவினரும் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து அறைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பொறியாளர்கள் பிரிவில் கணக்கில் வராத 25,000 ரொக்கம் மற்றும் 3 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்து நள்ளிரவு தான்டியும் விசாரனை நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். மேலும் புத்தாண்டு பிறப்பை ஒட்டி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பரிசு பொருட்கள் பெறுவதாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆய்வு குழு தலைவர் கோட்டீஸ்வரன் என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கணேசன் ஆய்வாளர் விஜயலட்சமி தலைமையிலான போலீசார் சோதனை செய்ய சென்றபோது ஊரக வளர்ச்சி அலுவலகம் ஜன்னல் வழியாக வழியாக பணம் மட்டும் தங்க நாணயம் தூக்கி வீசி விட்டதாக தகவல் தெரிவித்தனர் ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பொறியியாளர்கள் பிரிவில் கணக்கில் வராத 25,000 ரூபாய் ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரி, 15 சர்ட், பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத் போலிசார்கள் ஊரக வளர்ச்சித்துறையின் ஒட்டு மொத்த சிசிடிவி புட்டேஜ்களையும் ஆய்வு செய்து கடந்த 30.12.2025 முதல் 2.1.2026 வரையில் யார் யார் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை சந்திக்க வந்துள்ளனர் என்பதை ஆய்வு செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
Next Story


