சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

நடராஜர் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபுரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் பெரியநாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் பிரதோஷத்திற்கென்றே கட்டப்பட்டதாகும். காவிரியின் தென்கரையில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலுடன் இணைந்த புராதன கோவிலான சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணி அளவில் நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகமும் அதை தொடர்ந்து மாலை 4 மணியளவில் ஆனந்த தரிசனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதன் பின்னர் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதேபோல பிரசித்துபெற்ற கடம்பவனேஸ்வரர் திருக்கோவிலிலும் நடராஜர் திருவீதி உலா நடைபெற்றது.
Next Story