டீசல் மற்றும் செலவினம் உயர்ந்துள்ளதால் ஆழ்துளை போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

X
Arani King 24x7 |4 Jan 2026 5:43 AM ISTஆரணியில் ஆழ்துளை ஆழ்துளை கிணறு போடும் பணிக்கு மூல பொருட்கள் டீசல் மற்றும் செலவினம் உயர்ந்துள்ளதால் போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆரணியில் ஆழ்துளை ஆழ்துளை கிணறு போடும் பணிக்கு மூல பொருட்கள் டீசல் மற்றும் செலவினம் உயர்ந்துள்ளதால் போர்வெல் உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் கடந்த 10நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை முன்னிட்டு ஆரணியிலும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை போர்டு போடும் கனரக வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் உள்ளனர் மேலும் இந்த பகுதியில் புதியதாக கட்டபடும் கட்டங்களுக்கு உரிய அனுமதி பெற்று ஆழ்துளை போர்வெல் போட்டு வருகின்றனர். தற்போது ஆழ்துளை போர் அமைக்க டீசல் மற்றும் மூல பொருட்கள் விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதால் ஆழ்துளை கிணறுகள்(போர்) அமைப்பதற்கு ஏற்ற கூலி சரியாக வழங்கபடவில்லை என்றும் இதனால் தமிழக அரசு டீசல் மற்றும் ஆழ்துளை போருக்கு பயன்படுத்தபடும் மூலபொருட்களுகளை விலை குறைக்க கிடைக்க கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் போர்வெல் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஆரணி பகுதியில் ஆரணி அனைத்து ரிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்துளை போருக்கு செலவினம் உயர்ந்ததை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த தொழிலை நம்பி கூலி தொழிலாளிகள் வாழ்வதாரம் பாதிக்கபடுவதாக கூறி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக தலையீட்டு ஆழ்துளை போர்டு பணிக்கு மூலபொருட்களுக்கு விலை உயர்வை கட்டுபடுத்தி நிர்ணயம் செய்து கிடைக்க வழிவகை செய்ய கோரி ஆழ்துளை ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போராட்ட்தில் ஆரணி போர்வெல் உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சந்திரன், பொருளாளர் தரணி, நிர்வாகிகள் சுதாகர், சீனு, கோபால், ரமேஷ், ஜெயவேல் மற்றும் ரிக் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
