புதுக்கோட்டையில் மயில்கள் மரணம்

புதுக்கோட்டையில் மயில்கள் மரணம்
X
புதுக்கோட்டை அருகே குளத்தில் 11 மயில்கள் மர்ம மரணம்
புதுக்கோட்டை அருகே குளத்தில் 11 மயில்கள் மர்ம மரணம் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, வாராப்பூர் சரகம், வடவாளம் வட்டம், கண்டங்காரன்பட்டி கிராமத்தில் உள்ள கண்டங்கார குளத்தில் நேற்று (03.01.2026) இரவு சுமார் 8.00 மணியளவில் 11 மயில்கள் இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், குளத்தின் வடபகுதியில் புதர் மண்டிய பகுதியில் 1 ஆண் மயில் மற்றும் 10 பெண் மயில்கள் இறந்து கிடந்ததை கண்டறிந்தனர். வடவாளம் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் மயில்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. இது வன உயிரின குற்றம் என சந்தேகிக்கப்படுவதால், சம்பவம் குறித்து வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Next Story