திண்டுக்கல் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஒருவர் பலி

X
Dindigul King 24x7 |4 Jan 2026 10:15 AM ISTDindigul
திண்டுக்கல் தாடிக்கொம்பு, அழகுசமுத்திரபட்டி பிரிவு அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் திருப்பூரை சேர்ந்த சேகர்(55) சம்பவ இடத்திலேயே பலியானார் டிரைவர் பாண்டித்துரை காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி மேற்படி சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரிய கலா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
