திருமயத்தில் மாணவர்கள் பேரணி

திருமயத்தில் மாணவர்கள் பேரணி
X
திருமயத்தில் மாணவ மாணவிகளை சமூக ஊடக வலைதள தாக்கத்திலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மாணவ மாணவிகளை சமூக ஊடக வலைதள தாக்கத்திலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி* புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இளைய தலைமுறைகளை சமூக ஊடகங்ளுக்கு அடிமையாக்காமல் அவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்பை நேசிப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருமயம் அடைக்கலம் மாதா ஆலயத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது வாசிப்பை நேசிப்போம் என்ற பதாகையுடன்‌ தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலகம் வரை நடைபெற்றது அதனை தொடர்ந்து 70-க்கும் மேற்பட்டோர் தங்களை நூலகத்தின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.திருமயம் பங்கு தந்தை ஜேம்ஸ்ராஜ் அடிகளார் தலைமையிலும் தமிழ் ஆர்வலர் அகஸ்டின் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story