திமுக வர்த்தக அணி சார்பில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா

திமுக வர்த்தக அணி சார்பில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா
X
திமுக வர்த்தக அணி சார்பில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சண்முகநல்லூரில் மாநில திமுக வர்த்தகர் அணியின் சார்பில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா நடந்தது இதில் மாநில திமுக வர்த்தக அணி துணை செயலாளர் முத்துச்செல்வி தலைமை வகித்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார் இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பூசை பாண்டியன், வெற்றி விஜயன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சரவணகுமார், தென்காசி தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.எம்.எஸ்.முகேஷ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஊத்தாங்குளம் சரவணன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அன்பு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் திருமலை குமார், முத்துப்பாண்டி, கிளைக் கழகச் செயலாளர்கள் திருமலாபுரம் முருகன், குலசை ரவிச்சந்திரன், குருக்கள் பட்டி சுகுமார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மணிமேகலை, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ், கழகப் பற்றாளர் தம்பி செல்வ சூரியன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story