கரூரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற செந்தில் பாலாஜி.
Karur King 24x7 |4 Jan 2026 3:42 PM ISTகரூரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற செந்தில் பாலாஜி.
கரூரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற செந்தில் பாலாஜி. கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக செயலாற்றி வருபவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரது தொகுதிக்கு உட்பட்ட கரூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள புஞ்சை கடம்பன்குறிச்சி ஊராட்சி மற்றும் நன்னீர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை நேரடியாக அவர்களது வீடு வீடுகள் தோறும் சென்று அவர்களது குறைகள் குறித்து மனுவாக பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமம் தோறும் சென்ற செந்தில் பாலாஜிக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வீடுகள் தோறும் சென்று தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூறிய அவர் பொதுமக்களிடம் உள்ள பொது பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் மனுவாக பொதுமக்கள் அளித்ததை பெற்றுக் கொண்டார். மனுக்களை பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி விரைவில் அதற்கு தீர்வு காணுவதாகவும் உறுதி அளித்தார்.
Next Story





