கரூரில், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை.

கரூரில், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை.
கரூரில், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சங்கிலி என்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் திருவுருவ சிலைக்கும் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கும் மலர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட பொது செயலாளர் காமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அனைவரும் தலைவர்களுக்கு தங்களது வீர வணக்கத்தை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பரித்தனர். இந்த நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சங்கிலி, கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் ஆனந்தன்,மருது ஜி, சேதுராமன்,தர்மர், விக்னேஷ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவிக்கும் நிகழ்வை சிறப்பித்தனர்.
Next Story