உப்பாறு அணையில் இருந்து அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையிலிருந்து அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்
தாராபுரம் அருகே உப்பாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் வலது கரை மற்றும் இடது கரை வாய்க்கால்கள் வழியாக 6,060 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்தநிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடி நீர் தேவையையும் கருத்தில் கொண்டு, உப்பாறு அணையிலிருந்து தேவைக்கேற்ப மொத்தம் 177 மில்லியன் கன அடி தண்ணீரை, தகுந்த இடைவெளியில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடந்தது, விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீரை திறந்துவிட்டனர். இதில், ஈரோடு பிரகாஷ் எம்.பி., மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே, தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் ராமலிங்கம், உப்பாறு அணை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர். இந்த தண்ணீர் வருகிற 23-ந்தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Next Story