ராசிபுரத்தில் விசிக கட்சி புதிய நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

ராசிபுரத்தில் விசிக கட்சி புதிய நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
X
ராசிபுரத்தில் விசிக கட்சி புதிய நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கான புதிய மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள், மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், ஆகியோரின் பட்டியலை நேற்று அறிவித்திருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிழக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கார் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்க கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மண்டல செயலாளர் பழ. மணிமாறன் தலைமை வகித்தார். ராசிபுரம், சேந்தமங்கலம் மண்டல துணைச் செயலாளர் வ. அரசன், நாமக்கல், பரமத்தி மண்டல துணைச் செயலாளர் வே. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா. மகேந்திரன், மாவட்ட பொருளாளர் பெ. செங்குட்டுவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் வ. ராமசாமி, ஆகியோர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ப. பிரபாகரன், மாவட்ட பொருளாளர் செல்வராஜீ, மாவட்ட துணைச் செயலாளர் இன்பரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பண ரோசா, நாமக்கல் சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளர் இரா. வசந்தன், மாவட்ட பொருளாளர் செல். அன்பு, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் கதிர்வேந்தன், பரமத்தி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ஆசீர்வாதம், உள்ளிட்ட நிர்வாகிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் கோஷங்கள் எழுப்பினர்,.. மேலும் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் ராசிபுரம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விசிக நகர் மன்ற உறுப்பினர் ந. பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்தும் பட்டாசு வெடித்து உற்சாகமாக அவர்களுக்கு வரவேற்பு அளித்தார். தொடர்ந்து ராசிபுரம் தொகுதி செயலாளர் க. கண்ணன் அவர்கள் அனைவருக்கும் நன்றி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், சிங்கிலியங் கோம்பை, அத்தனூர், சீராப்பள்ளி, வெண்ணந்தூர், முத்துகாளிபட்டி,, கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், சிங்களாந்தபுரம், நாமக்கல், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம், உள்ளிட்ட பகுதியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story