கரூரில் தியானம் மற்றும் மௌனம் குறித்து ஒரு நாள் அறிமுக வகுப்பு நடைபெற்றது.
Karur King 24x7 |4 Jan 2026 5:40 PM ISTகரூரில் தியானம் மற்றும் மௌனம் குறித்து ஒரு நாள் அறிமுக வகுப்பு நடைபெற்றது.
கரூரில் தியானம் மற்றும் மௌனம் குறித்து ஒரு நாள் அறிமுக வகுப்பு நடைபெற்றது. கருணை நெறி வளர் அறக்கட்டளையின் சார்பில் தயா யோகா அமைப்பில் பிரபாவதி அம்மா அவர்களின் தலைமையில் தியானம் மற்றும் மௌனம் குறித்து ஒரு நாள் அறிமுக வகுப்பு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருந் தொண்டார் செந்தில்குமார் சாந்தி ஆடிட்டர் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் மெய்யண்பர்கள் வி கே ஜி முருகேசன், வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் ஹேமலதா, சங்கர வித்யாலயா பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி சாமியாத்தாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உடல்,உயிர், மனம், அறிவு, ஆன்மா ஆகியவற்றை ஒரு சேர தூய்மை செய்து ஆனந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் வகையில் ஆத்ம விசாரா, ஆத்ம பிரக்னா, ஆத்ம திர்ஷ்டா, ஆத்மா ஐக்கியா உள்ளிட்ட பயிற்சிகளும், அருட்பெருஞ்ஜோதி அகவல், திருவருட்பா, வள்ளல் பெருமானாரின் உரைநடைபகுதிகள், திருவாசகம், திருமந்திரம், உப நிடதங்கள், பெரியபுராணம் தாயுமானவர் பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற தலைப்புகளில் விளக்க வகுப்புகளும் நடைபெற்றது. ஏற்கனவே பயிற்சி பெற்ற நிபுனர்கள் தியானம் மற்றும் மௌனம் குறித்தும் சைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் விளக்கி கூறினர்.
Next Story





