புரட்சிகர தொழிலாளர் கட்சி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..‌

புரட்சிகர தொழிலாளர் கட்சி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..‌
X
புரட்சிகர தொழிலாளர் கட்சி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..‌
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர தொழிலாளர் கட்சி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்: பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நலன் கருதி கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்… புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொது சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வரின் கவனத்தை பெறும் வகையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முன்பு நடைபெற்றது. புரட்சிகர தொழிலாளர்கள் கட்சியின் மாநில தலைவர் கே.வெங்கடாசலம், மாநில பொருளாளர் மாநில இளைஞர் அணி தலைவர் வி. பூபதி, ஆகியோர் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பி. மாணிக்கம், பொதுச் செயலாளர் வி. சுந்தராம்பாள், மாநிலத் துணைத் தலைவர் சி. குப்புசாமி, ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டணம் உயர்வால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே மாதம் ஒரு முறை மின் கணக்கீடு மின்சார வாரியத்தின் மூலம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கழிப்பிட வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அதனை தவிர்க்க தமிழக அரசு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் கழிப்பிட வசதி செய்து தரக்கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பொங்கல் சிறப்பு தொகை வழங்க வேண்டும், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் உதவி தொகை 3,000 உயர்த்தி வழங்க வேண்டும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் விபத்து காப்பீட்டு தொகை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாமக்கல் மாவட்ட தலைவர் கே. பெரியசாமி, நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் வி ராஜ்குமார், நாமக்கல் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் எஸ். சுந்தரம், நாமக்கல் மாவட்ட அவைத்தலைவர் வி. கே. செல்வராஜ், துணைச் செயலாளர் எஸ்‌ செங்கோடன், துணைத் தலைவர் ஏ. சின்ன பையன், ராசிபுரம் தொகுதி அமைப்பு தலைவர் பி. முருகேசன், மாவட்ட அமைப்பாளர் கே. எ. பச்சமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் கே. மாரிமுத்து, தொகுதி அமைப்புச் செயலாளர் கதிரேசன், ராசிபுரம் ஒன்றிய துணைத் தலைவர் செல்வம், தொகுதி அமைப்பு துணைச் செயலாளர் மாது (எ) கே. பெருமாள், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் எம். பூபதி ராஜா, ராசிபுரம் ஒன்றிய கவுரவத் தலைவர் ஆர். முத்து, ராசிபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர். மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி தலைவர் பி. முருகேசன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் எஸ். கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
Next Story