கிராமப்புற மாணவர்களின் தமிழ்நாடு அரசு பணி கனவை நனவாக்கும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி.
NAMAKKAL KING 24X7 B |4 Jan 2026 7:30 PM ISTதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட குரூப் 4 தேர்வில் சங்கர் ஐ ஏ எஸ் அகாடெமியில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா,
சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கிளையான நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ( Chief Guest ) தாராபுரம் பகுதியின் கூட்டுறவு துணை பதிவாளர், P. திவ்யா,கௌரவ விருந்தினராக (Guest of honour) கூட்டுறவுத்துறை மூத்த ஆய்வாளர் S. லோகேஸ்வரன் மற்றும் திருச்செங்கோடு பகுதியின் கூட்டுறவுத்துறை மூத்த ஆய்வாளர் திருமதி R.S.கார்த்திகா அவர்களும் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். மேலும், அவர்களுடைய அனுபவம் மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வுகள் (TNPSC EXAMS ) பற்றிய விளக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இந்த விழாவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நாமக்கல் கிளை மேலாளர், K .அருள்குமார் மற்றும் இன்னபிற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கடந்த வருடத்தில் மட்டும் ,இங்கு பயின்ற மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் குரூப் 2&2A தேர்வில் மற்றும் இன்னபிற தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Next Story


