தோகா அமைப்பின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா.
NAMAKKAL KING 24X7 B |4 Jan 2026 7:46 PM ISTதமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன், நாமக்கல் மாவட்ட மற்றும் தாலுகா சங்கத்தின் 5ம் ஆண்டு தொடக்கவிழா, மாநில துணைத்தலைவர் எட்டிக்கன் தலைமையில் நடைபெற்றது.
தாலுகா சங்க தலைவர் கங்கை குமார், மாவட்ட தலைவர் ராகம் பாபு, மாவட்ட செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராணி ராஜமாணிக்கம், சேலம் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாலுகா சங்கத்தின் செயலாளர் ராஜசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தின் கொடியினை ஏற்றிவைத்து பேசிய பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வணிகர் நல வாரியத்தின் பயன்கள் குறித்து பேசினார். தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணமில்லா சேர்க்கையை பயன்படுத்தி மார்ச் 31ம் தேதிக்குள் வணிகர்கள் அனைவரும் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து பயன்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதனை தொடர்ந்து, மரணம் அடைந்த தாலுகா சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராயல் பத்மநாபன், துணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழா நிறைவில் தாலுகா சங்கத்தின் பொருளாளர் செல்வகுமார் கூறினார்.
Next Story




