அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஏ.ஆர்.ராகுல் நாத் பங்கேற்பு.
NAMAKKAL KING 24X7 B |4 Jan 2026 8:08 PM ISTசுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் / வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஏ.ஆர்.ராகுல் நாத், தலைமையில், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (04.01.2026) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் / வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஏ.ஆர்.ராகுல் நாத், தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் / வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஏ.ஆர்.ராகுல் நாத், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2002 வாக்காளர் பட்டியலுடன் தொடர்புபடுத்த இயலாத வாக்காளர்களை விசாரணை செய்து விரைவில் முடிக்கவும், சிறப்பு முகாம்களில் பெறப்படும் படிவம்-6, 7 மற்றும் 8 ஆகியவற்றை விரைவில் முடிவு செய்ய வேண்டும் எனவும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் / வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஏ.ஆர். ராகுல் நாத், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், பள்ளிபாளையம் வட்டம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சி, சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் விட்டலபுரி ஜே.கே.கே.ரங்கம்மாள் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்களான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) செல்வராஜ், ராஜேஷ் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




