ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முதன் முறையாக முத்தாங்கி அலங்காரம்...

X
Rasipuram King 24x7 |4 Jan 2026 8:12 PM ISTராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முதன் முறையாக முத்தாங்கி அலங்காரம்...
ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் க்கு முதன்முறையாக முத்தாங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது ஆண்டுதோறும் கம்பம் இருக்கும் ஒரே கோவில் ஆகும். வருடம் தோறும் நடைபெறும் மாரியம்மன் திருவிழா ஐப்பசி மாதத்தில் ஒரு மாத காலத்திற்கு மேல் நடப்பது கோவிலின் சிறப்பம்சமாகும். அதே வேளையில் ஒவ்வொரு திருவிழா முக்கிய காலங்களிலும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரங்கள் அன்ன அலங்காரம், காய்கறி அலங்காரம், வெற்றிலை அலங்காரம், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், நவரத்தின கற்கள் அலங்காரம். வளையல் அலங்காரம், பூ அலங்காரம், வெள்ளி காப்பு, சந்தன காப்பு, உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம். பக்தர்களும் பல்வேறு வகைகளில் சுவாமிக்கு பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்.அந்த வகையில் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக முத்தாங்கி அங்கியை வழங்கினார்கள். அதனை முதன்முறையாக கோயில் பூசாரிகள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அணிவித்தார்கள் இதனை அறிந்த ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்..
Next Story
