தெருமுனைப் பிரச்சார கூட்டம் மற்றும் வெற்றி வாக்குச்சாவடி சிறப்புக்கூட்டம்
Perambalur King 24x7 |4 Jan 2026 9:30 PM ISTபெரம்பலூர் ஒன்றிய தி.மு.க.சார்பில், வடக்கு மாதவி கிராமத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா! தெருமுனைப் பிரச்சார கூட்டம் மற்றும் வெற்றி வாக்குச்சாவடி சிறப்புக்கூட்டம் நடைபெற்றது! கழக செய்தி தொடர்பாளர் க.நாகநந்தினி யுவராஜ், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் பங்களிப்
பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க.சார்பில், வடக்கு மாதவி கிராமத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா! தெருமுனைப் பிரச்சார கூட்டம் மற்றும் வெற்றி வாக்குச்சாவடி சிறப்புக்கூட்டம் நடைபெற்றது! கழக செய்தி தொடர்பாளர் க.நாகநந்தினி யுவராஜ், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க.சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளரும் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.இராஜ்குமார் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை வரவேற்புரயில், ஒன்றிய துணைச் செயலாளர் தேவகிநடராஜன், நா.ஆதித்யன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் இரா.கலையரசன், ஒன்றிய அவைத்தலைவர் மு.இராமச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் பி.ஜெயராமன், சி.கலையரசன், மா.கார்த்திகேயன், ரா.சஞ்சீவ்குமார், பெ.திலகேஷ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் வா.இராஜ்குமார்,சி.இரமேஷ், சு.பிரபு ஆகியோர் முன்னிலையில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் மற்றும் வெற்றி வாக்குச்சாவடி சிறப்புக்கூட்டம் வடக்கு மாதவி கிராமத்தில் நடைபெற்றது. இந்த தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் க.நாகநந்தினி யுவராஜ், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் தி.மு.க. அரசின் சாதனைகளையும், செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் விரிவாக எடுத்து கூறினார்கள். தலைமை கழக பேச்சாளர்கள் எசனைஆறுமுகம், மு.விஜயரத்தினம், SRT.ராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், லெட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடக்கு மாதவி கிளைச் செயலாளர் ரா.சதீஷ்குமார் நன்றியுரையாற்றினார்.
Next Story


